Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லைகாவுக்கு ரூ.21 கோடி கடன்: சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவு

Advertiesment
vishal
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (14:48 IST)
லைக்கா நிறுவனத்துக்கு விஷால் ரூபாய் 21 கோடி ரூபாய் கடன் செலுத்த வேண்டியுள்ள நிலையில் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
நடிகர் விஷால் அன்புசெழியனிடம் 21 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்த நிலையில் அந்த கடனை லைக்கா நிறுவனம் ஏற்றுக் கொண்டது.  இதனை அடுத்து விஷாலின் அனைத்து படங்களையும் லைக்கா நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்ற ஒப்பந்தம் போடப்பட்டட்து.
 
இந்த நிலையில் ’வீரமே வாகை சுடும்’ உள்ளிட்ட ஒரு சில படங்களை விஷால் வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்ததை அடுத்து லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தபோது, விஷால், தன்னால் ரூ 21 கோடி ரூபாய் கட்ட முடியாத நிலையில் இருந்ததாகவும் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
 
இதனை அடுத்து விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, செப்டம்பர் 1ஆம் தேதி இந்த வழக்கை ஒத்திவைத்தது. அன்றைய தினம் விஷால் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த வார ரிலீஸ்கள் எதுவும் ரசிகர்களைக் கவரவில்லை… இரண்டாவது வாரத்தில் கலக்கும் திருச்சிற்றம்பலம்!