கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் வேறு வழியின்றி ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன என்பது தெரிந்ததே.
நடிகர் விஷாலின் ’சக்ரா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த படத்திற்கு ரூபாய் 45 கோடி விஷால் கேட்டதாகவும் ஆனால் அமேசான் நிறுவனம் ரூபாய் 33 கோடி வரை கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் இதனையடுத்து ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்தனர். இந்நிலையில் விஷாலில் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகிறது.
மேலும், தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தில்விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்