Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பகத்சிங்கும் கங்கனாவும் ஒன்றா? விஷாலை கிண்டலடித்த நெட்டிசன்கள்

Advertiesment
பகத்சிங்கும் கங்கனாவும் ஒன்றா? விஷாலை கிண்டலடித்த நெட்டிசன்கள்
, வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:34 IST)
பகத்சிங்கும் கங்கனாவும் ஒன்றா? விஷாலை கிண்டலடித்த நெட்டிசன்கள்
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனை அடுத்து நடந்த மோதலால் கங்கனாவின் அலுவலகத்தை சிவசேனா ஆட்சி இடிக்க முயன்றது என்பதும் நீதிமன்றம் அதனை தடை செய்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் கங்கனாவுக்கு பல திரையுலக பிரபலங்கள் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் நடிகர் விஷால் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்குடன் கங்கனாவை அவர் ஒப்பிட்டிருந்தார். கங்கனாவின் தைரியமான செயல்கள்  பகத்சிங் 1920- களில் செய்ததை ஒத்ததாக உள்ளது என்றும், இது, ஏதேனும் தவறாக இருக்கும்போது அரசுக்கு எதிராக பேசுவதற்கு மக்களுக்கு உதாரணமாக அமையும் என்றும்,அதற்கு பிரபலமாக இருக்கவேண்டும் என்பதில்லை, சாதரணமானவனாக இருந்தாலும்போதும் என்றும் தெரிவித்திருந்தார்
 
விஷாலின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரிட்டிஷாரை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராடிய பகத்சிங்கும் சொந்த காரணங்களுக்காக மாநில அரசை எதிர்க்கும் நடிகையும் ஒன்றா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதில் இருந்தே விஷாலின் அரசியல் அறிவு எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரிய வருகிறது என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர் இதனால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரவ் திருமணம்: சம்பந்தமில்லாமல் டுவிட் செய்த ஓவியா