Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷாலின் ''சக்ரா'' பட டிரைலர் ரிலீஸ் ! ரசிகர்கள் கொண்டாட்டம் !

விஷாலின் ''சக்ரா'' பட டிரைலர் ரிலீஸ் ! ரசிகர்கள் கொண்டாட்டம் !
, சனி, 13 பிப்ரவரி 2021 (20:12 IST)
நடிகர் விஷால்  நடிப்பில் உருவாகியுள்ள படம் சக்ரா. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் அவரது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ள படம் சக்ரா.

இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ரிலீசாகும் என விஷால் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததுடன், இப்படத்தின் தமிழ் வெர்சனுக்கு யு/ஏ என்று சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தெலுங்கு வெர்சனுக்கு சென்சார் இனிமேல் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.


இந்நிலையில் சக்ரா படத்தின் ஹிந்தி டிரைலர் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்சன் படத்திற்கு உரிய விறுவிறுப்புடன் இந்த டிரைலர் காட்சியமைக்கப்பட்டுள்ளது.

இந்த டிரைலர்  விஷால் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விஷாலில் முதல் ஹிந்தி டப்பிங் படம் இது என்பதால் நிச்சயம் இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் சில நாட்களுக்கு முன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல் (தெலுங்கு, தமிழ் ) ரிலீசாகி வைரலானது..

இப்பாடலை சின்மயி மற்றும் பிரார்த்தனா இந்திரஜித் இணைந்து பாடியுள்ளனர். இந்த அம்மா பாடல் அனைத்து அம்மாக்கள் மற்றும் மகள்களுக்கான இப்பாடல் சமர்பிப்பதாக படக்குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டிரைலர் லிங்க் கீழே உள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் ''கர்ணன்'' படம் எப்போது ரிலீஸ்...தயாரிப்பாளர் தகவல்