Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரும்புத்திரையில் திட்டமிட்டு விமர்சித்து கருத்து சொல்லப்படவில்லை- விஷால்

Advertiesment
இரும்புத்திரையில் திட்டமிட்டு விமர்சித்து கருத்து சொல்லப்படவில்லை- விஷால்
, சனி, 12 மே 2018 (17:45 IST)
விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் இரும்புத்திரை படத்தில் திட்டமிட்டு விமர்சித்து கருத்து சொல்லப்படவில்லை என விஷால் கூறியுள்ளார்.
நடிகர் விஷால் நடித்து நேற்று வெளியான இரும்புத்திரை படத்தில் சமந்தா, அர்ஜூன், மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை விஷால் பிலிம்பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.
 
இத்திரைப்படத்தில் ஆதார் தகவல் திருட்டு, மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் ஆகிய திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், எனவே இதனை நீக்கக்கோரி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சென்னை காசி திரையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், விஷால் வீட்டை முற்றுகை இடப்போவதாகவும் தெரிவித்தனர். இதனால் விஷால் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
webdunia
 
இந்த நிலையில் இரும்புத்திரை படத்தில் திட்டமிட்டு விமர்சித்து எந்த கருத்தும் சொல்லப்படவில்லை என்று விஷால் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
 
“ வருங்காலத்தில் நடக்கவிருக்கும், தற்போது நடந்துவரும் சமூக பிரச்சனைகள் குறித்து இந்த படத்தில் பேசியுள்ளோம். யாரையும் திட்டமிட்டு விமர்சித்து படத்தில் கருத்து சொல்லப்படவில்லை. அதனால் நான் யாருக்கும் பயப்பட தேவையில்லை என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்விட்டரில் பிக்பாஸ் 2 டீசர் வெளியிட்ட கமல்