Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு விஷால் அவசர அழைப்பு:

Advertiesment
கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு விஷால் அவசர அழைப்பு:
, ஞாயிறு, 26 நவம்பர் 2017 (13:46 IST)
தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட்டபோதே, கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத்தினர்களிடம் பேசி, அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு ஒரு நிலையான வருமானம் பெற்றுத்தருவோம் என்று விஷால் வாக்குறுதி அளித்திருந்தார். இதன்படி இன்று ஒரு முக்கிய அறிவிப்பை அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் விஷால் கூறியிருப்பதாவது:

கேபிள் டிவியை நம்பியிருக்கும் பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதரங்களை மேம்படுத்தவும், இடைத்தரகர்கள் இல்லாமல் அச்சமின்றி நேர்மையுடன் சுதந்திரமாக தொழில் செய்யவும், கேபிள் டிவி தொழிலை முறைப்படுத்தி வருமானத்தை பெருக்கவும், தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானித்திருக்கிறது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கேபிள் டிவி உரிமையாளரையும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நேரடி தொடர்பில் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு தேவையான விண்ணப்பப்படிவம் இதர ஆவணங்கள் மற்றும் தங்கள் சேனலின் மாத சந்தா விபரங்களை பற்றிய தகவல்கள் அறிய கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். தயாரிப்பாளர் சங்கமும் தங்களை கீழ்க்கண்ட இந்த எண்களில் இருந்து மட்டுமே அழைக்கும்

9790045701
9551402255
9551502255
9551392255

தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் தினசரி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை. ஞாயிறு விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் டிவி உரிமையாளர்கள் அனைவரையும் ஒன்றுபட்டு செயல்பட அன்போடு அழைக்கிறோம்
webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படப்பிடிப்பில் பாம்பை கண்டு பதறி ஓடிய சன்னிலியோன்: வீடியோ