Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (18:21 IST)
விஷால் நடித்த மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பது இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும்  கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்ற மார்க் ஆண்டனி திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படம் அக்டோபர் 13ஆம் தேதி  அதாவது வரும் வெள்ளிக்கிழமை அமேசான் ப்ரைம் ஓடிடியில் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை

 இந்த படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்றதால் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஷாலுக்கு கிடைத்த வெற்றிப்படம், தற்போது ஓடிடியில், வெளியாக இருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டைம் டிராவல் கதையம்சம் கொண்ட இந்த படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி உள்ளது. இந்த  படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிதுவர்மா, அபிநயா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வினோத்குமார் தயாரித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments