Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோசமான விமர்சனம் & வசூல்… ஓடிடியில் முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் சந்திரமுகி 2

மோசமான விமர்சனம் & வசூல்… ஓடிடியில் முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் சந்திரமுகி 2
, வெள்ளி, 6 அக்டோபர் 2023 (10:18 IST)
ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இந்த படம் கடந்த வாரம் ரிலீஸாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்கனாவின் நடிப்பும் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங்கும் எதிர்பார்த்த படி போகவில்லை.

இதனால் இந்த படம் திட்டமிட்டதைவிட முன் கூட்டியே ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அனைத்து மொழிகளிலும் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் ஹெச் வினோத் படத்தின் இசையமைப்பாளர் இவரா? -17 வருடங்களுக்கு பிறகு இணையும் கூட்டணி!