Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷாலின் 32வது படத்தின் டைட்டில் அறிவிப்பு!

விஷாலின் 32வது படத்தின் டைட்டில் அறிவிப்பு!
, ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (19:15 IST)
விஷால் நடித்து வரும் 32வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
விஷால் மற்றும் சுனைனா இணைந்து நடித்து வரும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை நடிகர்கள் ராணா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் ’லத்தி சார்ஜ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் மாஸ் ஆக இருப்பதாக விஷால் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அண்ணாத்த’ படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!