Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷாலின் ‘எனிமி’ படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம்!

விஷாலின் ‘எனிமி’ படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம்!
, ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (16:12 IST)
நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த ‘எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து, தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ‘எனிமி’ படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 159 நிமிடங்கள் என்றும் அதாவது இரண்டு மணி நேரம் 39 நிமிடங்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட பல நடித்த இந்த திரைப்படத்தின் பாடல்களுக்கு எஸ்.தமன் அவர்களும் பின்னணி இசையை சாம்.சி.எஸ் அவர்களும் அமைத்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் எஸ் வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதியில் நடிகை ஸ்ரீதேவி: செல்பி எடுக்க முண்டியடித்த ரசிகர்கள்!