துப்பறிவாளன் 2 சிக்கல்… புதிய முடிவை எடுத்த விஷால்!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (15:41 IST)
துப்பறிவாளன் 2 படத்தினை மிஷ்கின் விலகிய பிறகு விஷாலே இயக்க முடிவெடுத்துள்ளார்.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது லண்டனில் மீண்டும் படப்பிடிப்பு நடத்தலாம் என விஷால் தரப்பு தயாரானது. ஆனால் படத்தில் விஷால் படமாக்கியக் காட்சிகளுக்கும், மிஷ்கினின் காட்சிகளுக்கும் துளிகூட ஓட்டவில்லை என்பதால் படக்குழு அதிர்ச்சியானது. இதனால் சில மாதங்கள் அப்படியே அந்த படத்தைக் கிடப்பில் போட்டது படக்குழு. இந்நிலையில் இப்போது மிஷ்கின் எடுத்த காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிட்டு மீண்டும் அந்த காட்சிகளை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் விஷால்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments