Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாசிடிவ்-னு வந்தா நெகடிவ் எஃபெக்ட்ஸ் தான்... வீரர்களுக்கு பிசிசிஐ வார்னிங்!

Advertiesment
இந்தியா
, செவ்வாய், 11 மே 2021 (14:01 IST)
இந்திய வீரர்கள் யாருக்கேனும் நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானால் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை. 

 
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் முதல் செப்டம்பர் வரை இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி உட்பட ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் மும்பையிலிருந்து இங்கிலாந்து செல்வதற்கு முன்னர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். 
 
இவ்வாறு பரிசோதனை  செய்யும் போது இந்திய வீரர்கள் யாருக்கேனும் நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானால் இங்கிலாந்து தொடரை சம்பந்தப்பட்ட வீரர் மறந்து விட வேண்டியதுதான் எனவும் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களை எச்சரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இலங்கை அணிக்கு திரும்பும் லசித் மலிங்கா… உலகக்கோப்பையில் களமிறங்குகிறாரா?