17 நாட்கள் இடைவிடாத படப்பிடிப்பு… ‘மகுடம்’ க்ளைமேக்ஸை முடித்த விஷால்!

vinoth
செவ்வாய், 18 நவம்பர் 2025 (08:43 IST)
சில மாதங்களுக்கு முன்னர் விஷால் நடிப்பில் ரவி அரசு இயக்கத்தில் உருவாகும் ‘மகுடம்’ படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து இயக்குனர் ரவி அரசு நீக்கப்பட்டு அவருக்குப் பதில் விஷாலே படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இது சம்மந்தமான தெளிவான விளக்கம் எதுவும் விஷால் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இயக்குனரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஷால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்நிலையில் தன் தரப்பு விளக்கத்தை சொல்ல இயக்குனர் ரவி அரசு விஷால் இல்லத்துக்கு சென்றதாகவும், ஆனால் பலமணி நேரம் ஆகியும் விஷால் அவரை சந்திக்கவே இல்லை என்றும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து மகுடம் படத்தை இயக்கி வந்த விஷால் தற்போது படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை சுமார் 17 நாட்கள் இடைவெளியின்றி இரவில் ஷூட் செய்து முடித்துள்ளார். இது சம்மந்தமான வீடியோத் துணுக்கைப் படக்குழு பகிர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிப்பு சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மரணம்!.. சூப்பர்ஸ்டார் நேரில் அஞ்சலி!..

50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மையா?!.. கொளுத்திப்போட்டது யாரு?!...

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments