Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் ‘எனிமி’ படப்பிடிப்பு நிறைவு: இயக்குனர் டுவிட்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (19:51 IST)
பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா மீண்டும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘எனிமி’. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் சமீபத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில் விஷால் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர் 
 
இந்த நிலையில் ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் படக்குழுவினருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
விஷால், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தமன் இசையில், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில்  உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சல்மான் கானுக்கு அரிய வகை மூளை நோய்… ரசிகர்கள் அதிர்ச்சி!

தவறான நபர்களை நம்பி ஏமாறவேண்டாம் – ‘மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எச்சரிக்கை!

போதைப் பொருள் வழக்கு… ஜாமீன் கேட்டு ஸ்ரீகாந்த் மனுத்தாக்கல்?

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments