Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் 34 படத்தின் டீசர் விரைவில்.. மின்னல் வேகத்தில் செல்லும் இயக்குனர் ஹரி!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (09:21 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி அடுத்து விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைகின்றனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் ஹரி. இப்போது சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில்  படத்தின் டீசருக்கான ஷூட்டிங்கை முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து ‘விஷால் 34’ படத்தின் டீசர் விரைவில் அறிமுகம் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments