Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாக்டர் வில்லன்… சிவகார்த்திகேயனிடம் இருந்து வந்த அழைப்பு- வினய் சொன்ன ரகசியம்!

டாக்டர் வில்லன்… சிவகார்த்திகேயனிடம் இருந்து வந்த அழைப்பு- வினய் சொன்ன ரகசியம்!
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (17:27 IST)
டாக்டர் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார் நடிகர் வினய். இந்த படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

உன்னாலே உன்னாலே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வினய் அதன் பின்னர் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் மோசமான சில கதைகளை தேர்வு செய்து தோல்வி படங்களைக் கொடுத்ததால் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை.

இதையடுத்து விஷால் மிஷ்கின் கூட்டணியில் உருவான துப்பறிவாளன் படத்தில் வில்லனாக நடித்து கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் இப்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் தன்னிடம் போன் செய்து பேசியதாகவும் உடனே சம்மதித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷால், ஆர்யாவின் ‘ எனிமி ’பட ரிலீஸ் தேதி அறிவிப்பு