Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் டி இமான்!

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் டி இமான்!
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (16:54 IST)
இசையமைப்பாளர் டி இமான் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான சிங்கபாதை படத்துக்கு இசையமைக்க உள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது டான் படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே அவர் அயலான் மற்றும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் புதுமுக இயக்குனர் அசோக் குமார் இயக்கத்தில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு சிங்கபாதை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

இம்மாதம் இறுதியில் டான் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் அடுத்த மாதம் சிங்கப்பாதை படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ள உள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

இந்த படத்துக்கான தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு இப்போது நடந்து வருகிறது. படத்துக்கு இசையமைப்பாளராக சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லெஜண்ட் சரவணனின் ஜோடிக்கு UAE-ன்கோல்டன் விசா!