Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமல் படத்தில் நடிக்கும் பிரபல ஊடகவியலாளர்

ma po si
, செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (17:14 IST)
தமிழ்  சினிமாவில் இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பிரபல  ஊடகவியலாளர் நடிகராக அறிமுகம் ஆகிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் போஸ் வெங்கட். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாக மெட்டி ஒலி என்ற சீரியலில் நடித்ததன் மூலம்   நடிகராகப் பிரபலமானார்.

அதன்பின்னர், இயக்குனர் பாரதிராஜாவின்  ஈர நிலம் என்ற தொடரிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.  இதையடுத்து, வெள்ளித்திரையில், சிவாஜி, மருதமலை,  

குலசாமி, மாறன், டாணாக்காரன், காடன் உள்ளிட்ட  படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான கன்னிமாடன் என்ற படத்தின் மூலம் போஸ் வெங்கட்  இயக்குனராக அறிமுகம் ஆனார்

தற்போது, இவர் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடிக்கும் ம.பொ.சி என்ற படத்தில், பிரபல ஊடகவியலாளர் செந்தில் நடிக்கவுள்ளதாக அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!