Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் பட இயக்குனர் இயக்கத்தில் விமல் யோகி பாபு நடிக்கும் புதிய படம்!

விஜய் பட இயக்குனர் இயக்கத்தில் விமல் யோகி பாபு நடிக்கும் புதிய படம்!
, புதன், 19 அக்டோபர் 2022 (09:30 IST)
விமல் கதாநாயகனாக இப்போது சிலபல படங்களில் நடித்து வருகிறார்.

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது. இந்நிலையில் அவர் நடித்துள்ள விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த தொடரை புரூஸ் லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார். இந்த வெப் தொடர் நீண்ட நாட்களுக்குப் பிறகு விமலுக்கு ஒரு கம்பேக்காக அமைந்துள்ளது. இதையடுத்து தற்போது விமல் படங்கள் மேல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் விமல் தற்போது இயக்குனர் அப்துல் மஜித் இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அப்துல் மஜித் விஜய்யின் தமிழன் படத்தை இயக்கியவர். இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யோகி பாபு இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் இன்னபிற விஷயங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நானே வருவேன் உண்மை வசூல்… தாணுவின் போலி விளம்பரங்களை போட்டுடைத்த சினிமா பிரபலம்!