Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தா பட இயக்குனரின் அடுத்த படத்தில் விக்ரம்!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (07:54 IST)
பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அருண்குமார் அடுத்தடுத்து விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி மற்றும் சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் பாராட்டுகளையும் வசூலையும் குவித்துள்ளது.

சித்தா திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 30  கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது படத்துக்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. நல்ல படம் என்ற வாய்வழி விமர்சனங்கள் வழியாகவே இந்த படத்துக்கு விளம்பரம் கிடைத்து இப்போது பிக்கப் ஆகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அருண்குமார் அடுத்து இயக்கும் படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை இருமுகன் படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments