விக்ரம் வேதா படத்தை அடுத்து அதன் இயக்குனர்கள் தங்களது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.
விக்ரம் வேதா திரைப்படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியை அடுத்து அதன் இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் அந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர். மேலும் தமிழில் அடுத்தப்படத்துக்காக கதை சொல்லும் முயற்சியிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இப்போது தங்களது அடுத்த முயற்சியாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். வால்வாட்சர்ஸ் பில்ம்ஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த நிறுவனத்தில் புதுமுக இயக்குனர்கள் மற்றும் புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
மேலும் தங்கள் முதல் படம் குறித்த அறிவிப்பு நாளை வெளிவர இருக்கிறது என்றும் அறிவித்துள்ளனர்.