Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியில் ரீமேக் ஆகிறது சூப்பர் டீலக்ஸ் – இயக்குனர் யார் ?

இந்தியில் ரீமேக் ஆகிறது சூப்பர் டீலக்ஸ் – இயக்குனர் யார் ?
, வியாழன், 25 ஏப்ரல் 2019 (16:03 IST)
சமீபத்தில் தமிழில் வெளியாகி கவனம் ஈர்த்த படமான சூப்பர் டீலக்ஸ் படத்தினை இந்தியில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் ரிலிஸான சூப்பர் டீலக்ஸ் படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆரண்யகாண்டம் திரைப்படத்தை இயக்கி 8 ஆண்டுகளுக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக இந்தப்படம் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனாலும் பாலிவுட் கலைஞர்கள் படத்தைப் பார்த்துவிட்டு படத்தினைப் பாராட்டியதை அடுத்து இந்தி சினிமா ரசிகர்களுக்குப் படம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் படத்தினை இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த படத்தினை இந்தியிலும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்க இருப்பதாகவும் படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வருவதாகவும் தெரிகிறது. படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நடிகர் நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிரறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துக்கு இருக்குற நேர்மை கூட உங்களுக்கு இல்லை! - விளாசிய துணை இயக்குனர்!