Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா ரஞ்சித் – விக்ரம் படத்தைக் கைப்பற்ற முனைப்புக் காட்டும் பிரபல ஓடிடி!

பா ரஞ்சித் – விக்ரம் படத்தைக் கைப்பற்ற முனைப்புக் காட்டும் பிரபல ஓடிடி!
, ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (13:16 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் விரைவில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணி குறித்து கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மூலமாக முதன் முதலாக இயக்குனர் பா ரஞ்சித்துடன் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இணைகிறார். இதுவரை பா ரஞ்சித் தன்னுடைய படங்களுக்கு சந்தோஷ் நாராயணனை பயன்படுத்தி வந்தார்.

இந்த படம் கர்நாடக மாநிலம் கேஜிஎப் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு குறித்து பேசும் கதைக்களன் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கூட இன்னும் தொடங்காத நிலையில் படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினி படத்தில் அரவிந்த்சாமி?