Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் படத்துக்கு இப்படி ஒரு விளம்பரமா? இணையத்தில் கவனம் பெற்ற Perfume!

விக்ரம் படத்துக்கு இப்படி ஒரு விளம்பரமா? இணையத்தில் கவனம் பெற்ற Perfume!
, திங்கள், 23 மே 2022 (15:13 IST)
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு விக்ரம் திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இதையடுத்து படத்துக்காக வித்தியாசமான முறையில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் விக்ரம் படத்தின் புகைப்படம் மற்றும் தலைப்பைத் தாங்கிய வாசனைத் திரவியங்கள் இப்போது விறபனை செய்யப்பட்டு வருகின்றன. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயங்கி நின்ற பெண்ணுக்கு தாங்களாகவே செல்பிக்கு போஸ் கொடுத்த நயன் - விக்கி!