Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ… இணையத்தில் வைரல்!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (15:22 IST)
விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோ கிளிம்ப்ஸை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. வரும் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது.

இந்த படத்தில் யார் யார் என்னென்ன வேடத்தில் நடிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. முதல்முறையாக நேற்று பகத் ஃபாசில் ‘அமர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக புதிய போஸ்டரோடு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இதையடுத்து தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘சந்தானம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து தற்போது படத்தின் மேக்கிங் சம்மந்தப்பட்ட சில காட்சிகள் அடங்கிய கிளிம்ப்ஸ் வீடியோவை இணையத்தில் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாய் அப்யங்கருக்கு வாய்ப்பு வருவது இதனால்தான்… விஜய் ஆண்டனி கருத்து!

வொர்க் அவுட் ஆனதா வடிவேலு &fafa மேஜிக்?… முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தில் நான் யார்?... ஸ்ருதிஹாசன் பகிர்ந்த சீக்ரெட்!

கலவையான விமர்சனம் இருந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய ‘தலைவன் தலைவி’!

கோவை சரளா தமிழ் சினிமாவின் இன்னொரு மனோரமா.. வடிவேலு பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments