கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வரும் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது
இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதை இந்த படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதில் இருந்தே தெரிகிறது
இந்த நிலையில் இந்த படத்தை வெளியிடும் பிவிஆர் திரையரங்கம் இந்த படத்தின் ஒன்லைன் கதையை வெளியிட்டு உள்ளது
அதன்படி அரசு அதிகாரி ஒருவரை தீவிரவாதிகள் கடத்தி வைத்துக் கொண்டிருக்க அந்த அரசு அதிகாரியை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் மீட்பதே கதை என்று அறிவித்துள்ளது
இதனை அடுத்து ஓய்வு போலீஸ் அதிகாரியாக கமல்ஹாசன் நடித்து இருக்கிறார் என்று ஏற்கனவே செய்டி வந்த நிலையில் அரசு அதிகாரியும் தீவிரவாதியும் யார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்வோம்