விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘விக்ரம்’ ஆடியோ வெளியீடு… எப்போது? வெளியான தகவல்!

Webdunia
திங்கள், 16 மே 2022 (16:13 IST)
கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்தது.

முன்னதாக படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் கமல் ஆகியோரின் மாஸான ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள டிரைலர் ரசிகர்களின் ஆர்வத்தைப் பல மடங்கு எகிற வைத்துள்ளது. அதுபோலவே பாடல்களும் தற்போது ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் ஞாயிறு மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. விக்ரம் ஆடியோ லாஞ்ச் நடந்த நேரு விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்ட பேனர்களில் இந்த அறிவிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments