Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“புதுசா ஒரு கத பண்ணா ரீமேக்கான்னா கேக்குறாங்க”… ஆதங்கத்தைக் கொட்டிய S R பிரபு!

Webdunia
திங்கள், 16 மே 2022 (16:07 IST)
S R பிரபு தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் இன்று வெளியான O2 படத்தின் டீசர் இணையத்தில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் O2 திரைப்படம் ஓடும் இந்த படதின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டைட்டில் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஜி எஸ் விக்னேஷ் என்பவர் எழுதி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு முழு பேருந்தும் மண்ணுக்குள் புதைந்துவிட, அதில் இருக்கும் பயணிகள் நிலை என்ன ஆனது என்பதை சொல்லும் விதமாக டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர் இணையத்தில் பாராட்டுகளைக் குவித்து வரும் நிலையில் சிலர் ‘இது வேறு ஏதேனும் படத்தின் காப்பியா அல்லது ரீமேக்கா” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் SR பிரபு தற்போது வெளியிட்டுள்ள டிவீட்டில் “நம்ம ஊர்ல ஏன் வித்தியாசமா யோசிக்கிறதில்லனு ஆதங்கப்படறாங்கனு, நம்ம ஒரு கதைய தேடி எடுத்துட்டு வந்தா, பல பயலுவ இது எந்த கதையோட ரீமேக்குன்னு கேக்குறாங்க!! உங்க டிசைனே புதுசா இருக்கே!! Why da?” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் ஆகிறாரா விலங்கு வெப் சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டியராஜ்?

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments