விக்ரம் படத்திலிருந்து விலகிய மடோன் அஸ்வின்: ராம்குமார் பாலகிருஷ்ணன் இணைகிறாரா?

Siva
புதன், 13 ஆகஸ்ட் 2025 (18:23 IST)
நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி, ஆரம்பகட்டப்பணிகள் தொடங்க இருந்த நிலையில், அந்த படத்தின் வேலைகள் திடீரென நிறுத்தப்பட்டன. படத்தின் பணிகள் தாமதமானதால், ஒருகட்டத்தில் மடோன் அஸ்வின் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
 
விக்ரம் படத்திலிருந்து விலகிய மடோன் அஸ்வின், அதே கதையை வேறொரு முன்னணி நடிகரிடம் கூறியுள்ளதாகவும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தனது கனவு படத்தை வேறொரு நடிகருடன் உருவாக்க அவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
 
மடோன் அஸ்வின் விலகியதை தொடர்ந்து, விக்ரம் தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு வருகிறார். இந்த சூழலில், 'பார்க்கிங்' திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், விக்ரமிடம் ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், அந்த கதை விக்ரமுக்கு பிடித்திருந்ததால் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியானால், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments