சூர்யா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான 24 படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு வெளியான 24 படம் டைம் ட்ராவல் பற்றியது. ஆனால் அதில் டைம் டிராவல் பற்றிய அடிப்படை விஷயங்கள் கூட சரியாக காட்டப்படவில்லை எனக் கூறி விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அந்த படமும் மிகப்பெரிய வெற்றியும் பெறவில்லை. ஆனால் அந்த படத்தின் இயக்குனரும், நடிகருமான சூர்யாவும் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பேன் இந்தியா படமாக உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.