இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் தன்னுடைய மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்து ஒரு படத்தை உருவாக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர் தங்கர் பச்சான். 90 களில் வந்த பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளராக அவர் பணியாற்றினார். இடையில் சொல்ல மறந்த கதை, அழகி மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களை இயக்கி இயக்குனராகவும் தன் முத்திரையைப் பதித்தார்.
ஆனால் அவர் கடைசியாக இயக்கிய சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அம்மாவின் கைபேசி திரைப்படம் தோல்வி அடைந்ததால் அவருக்கு அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவதை அவர் நிறுத்திவிட்டார். இந்நிலையில் இப்போது தன் மகன் விஜீத் பச்சானை கதாநாயகனாக அறிமுகம் செய்து டக்கு முக்கு டிக்கு தாளம் என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
அவருடைய வழக்கமான படங்களைப் போலில்லாமல் இந்த படம் நகைச்சுவை படமாக இருக்கும் எனக் கூறியுள்ளார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. தரண்குமார் இசையில் அந்த பாடலை தேவா பாடியுள்ளார்.