Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்ரம் படத்துடன் மோதும் பிரசாந்த்.. உறவினர்களுக்குள் போட்டியா?

Advertiesment
விக்ரம் படத்துடன் மோதும் பிரசாந்த்.. உறவினர்களுக்குள் போட்டியா?

Siva

, வெள்ளி, 19 ஜூலை 2024 (20:32 IST)
நடிகர் விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று சற்று முன் அறிவிக்கப்பட்ட நிலையில் அதே தேதியில் பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ திரைப்படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விக்ரம் மற்றும் நடிகர் பிரசாந்த் ஆகிய இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்ற நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வெற்றி படத்திற்காக காத்திருக்கும் விக்ரம், நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீஎன்ட்ரி ஆகும் பிரசாந்த் ஆகிய இருவரும் ஒரே நாளில் படத்தை ரிலீஸ் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் ஏற்கனவே டிரைலர், ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் ஹிந்தியில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதால் ’அந்தகன்’ படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரே நாளில் ’தங்கலான்’ மற்றும் ’அந்தகன்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாவதை அடுத்து இந்த இரண்டில் எந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரசாந்த், சிம்ரன், கார்த்திக், பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ’அந்தகன்’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.  

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வணங்கான் பெயரை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி