Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புக்கிங் ஓபன் பண்றாங்க போல..! – இன்று மாலை விக்ரம் முக்கிய அப்டேட்!

புக்கிங் ஓபன் பண்றாங்க போல..! – இன்று மாலை விக்ரம் முக்கிய அப்டேட்!
, திங்கள், 23 மே 2022 (15:39 IST)
கமல்ஹாசன் நடித்து விரைவில் வெளியாக உள்ள விக்ரம் படம் குறித்த முக்கிய அப்டேட் இன்று வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ள நிலையில் படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது. இன்று படத்தின் காட்சி நேரம் 2 மணிநேரம் 53 நிமிடங்கள் என்ற தகவலும் வெளியானது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

டிரெய்லர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகிவிட்ட நிலையில் ரசிகர்கள் முன்பதிவு எப்போது தொடங்கும் என ஆவலாக காத்திருக்கின்றனர். இதனால் இன்று மாலை முன்பதிவு எப்போது தொடங்குகிறது என்ற அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் படத்துக்கு இப்படி ஒரு விளம்பரமா? இணையத்தில் கவனம் பெற்ற Perfume!