துருவ நட்சத்திரம் படத்தின் போது இயக்குனர் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்தது.
விக்ரம் நடிப்பில் இப்போது மகான், கோப்ரா, பொன்னியின் செலவன் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இவை இல்லாமல் துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இப்போது மகான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்ததாக கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.
அந்த படத்தை முடித்தபின் தனது சிகையலங்காரத்தை மாற்றிவிட்டு, பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க உள்ளாராம். இதற்காக 5 நாட்கள் மட்டும் தேதிகளைக் கொடுத்து அதற்குள் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளாராம். விரைவில் துருவ நட்சத்திரம் படத்தின் ஷுட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.