Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஷ்யாவில் மாஸான தோற்றத்தில் விக்ரம்! வெளியான புகைப்படம்!

ரஷ்யாவில் மாஸான தோற்றத்தில் விக்ரம்! வெளியான புகைப்படம்!
, புதன், 3 மார்ச் 2021 (15:06 IST)
ரஷ்யாவில் நடைபெற்று வரும் கோப்ரா படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் விக்ரம்மின் மாஸான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 58 வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து இப்போது படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் பாதிக் காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்ட நிலையில் மீதிக் காட்சிகளையும் அங்கேயே படம் பிடிக்க வேண்டிய கடடாயத்தில் படக்குழு இருந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அங்கு செல்வது தாமதமாகிக் கொண்டே வந்தது. இதனால் அந்த காட்சிகளை செட் போட்டு இங்கேயே படமாக்கலாம் என தயாரிப்பாளர் கூறினாலும் இயக்குனர் பிடிவாதமாக இருந்தார். அதையடுத்து இப்போது கோப்ரா படக்குழு ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு விக்ரம் அங்கு சென்று படக்குழுவினருடன் இணைந்துள்ளார்.

அங்கு படப்பிடிப்பு தளத்தில் கையில் டாட்டூவுடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகவா லாரன்ஸின் அந்த படம் ட்ராப்பா? ரசிகர்கள் ஏமாற்றம்!