Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோப்ரா படத்தின் தாமதம்… பிச்சிக்கிட்டு போன நடிகர்கள்!

கோப்ரா படத்தின் தாமதம்… பிச்சிக்கிட்டு போன நடிகர்கள்!
, வியாழன், 21 ஜனவரி 2021 (17:26 IST)
கோப்ரா படத்தின் தாமதத்தால் அந்த படத்தின் நடிகர் நடிகைகள் எல்லோரும் தங்களது மற்றப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனராம்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 58 வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து இப்போது படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனாலும் இன்னமும் 30 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை நடக்க வேண்டும் என சொல்லியுள்ளாராம் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இது தயாரிப்பாளருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தாமதத்தால் அந்த படத்தின் நாயகன் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்துக்கும், நாயகி தனது வேறு படங்களிலும் நடிக்க கிளம்பிவிட்டனராம். இதனால் மீண்டும் அவர்களிடம் தேதி வாங்கி படப்பிடிப்பு நடத்த மார்ச் மாதத்துக்கு மேல் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒப்பந்தமான நடிகர்!