Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொலைக்காட்சியில் விக்ரம் ஆடியோ வெளியீடு… விஜய் டி வி வெளியிட்ட ப்ரோமோ!

தொலைக்காட்சியில் விக்ரம் ஆடியோ வெளியீடு… விஜய் டி வி வெளியிட்ட ப்ரோமோ!
, வெள்ளி, 20 மே 2022 (09:13 IST)
நடிகர் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படமான விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மே 15 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடந்தது.

முன்னதாக படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் கமல் ஆகியோரின் மாஸான ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள டிரைலர் ரசிகர்களின் ஆர்வத்தைப் பல மடங்கு எகிற வைத்துள்ளது. அதுபோலவே பாடல்களும் தற்போது ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் ஞாயிறு மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இது சம்மந்தமான வீடியோ ப்ரோமோக்களை தற்போது விஜய் தொலைக்காட்சி இணையத்தில் வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரட்டாலா சிவா அடுத்த படத்திற்கு அனிருத் இசை: அதிகாரபூர்வ அறிவிப்பு!