விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக கோப்ரா உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த கோப்ரா கடந்த மாதம் முடிவுற்றது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. இப்போது ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என்ற தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.