Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் ரசிகர்கள் தியேட்டருக்குள் உள்ளிருப்பு போராட்டம்!

Advertiesment
vijay fans -leo
, புதன், 18 அக்டோபர் 2023 (13:00 IST)
விஜய் ரசிகர்கள் தியேட்டருக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் வரும் (அக்டோபர் 19 ஆம் தேதி) நாளை ரிலீஸாகவுள்ளது.

பான் இந்தியா படமான வெளியாகும் லியோ, இந்தியாவில் மட்டுமன்று உலகம் முழுவதும் வசூல் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் காலை 9 மணிக்கும் புதுச்சேரியில் காலை 7 மணிக்கு லியோ படம் வெளியாகவுள்ள நிலையில், புதுச்சேரியில் சிறப்பு காட்சிகள் திரையிட வேண்டும் என வலியுறுத்தி,  நேற்று,  விஜய் ரசிகர்கள் தியேட்டருக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லியோ படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், சிறப்பு காட்சிக்கு திரையிட மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காலை 9 மணிக்கு தியேட்டர்களில் லியோ படம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின் கட்டண உயர்வுக்கு அதானியே காரணம்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!