Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின்'' லியோ'' FDFS நள்ளிரவில் ரிலீஸ்...எங்கு தெரியுமா?

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (13:20 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் வரும் (அக்டோபர் 19 ஆம் தேதி) நாளை ரிலீஸாகவுள்ளது.

இப்படம்  காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த நிலையில்,  உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், உலகளவில் வெளியாகும் நேரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ் நாட்டில் காலை 9 மணி; புதுச்சேரியில் காலை 7 மணி: ஆந்திரா – அதிகாலை 5 மணி, கேரளா- அதிகாலை 4 மணி, கர்நாடகா- அதிகாலை 4 மணி, வட இந்தியா அதிகாலை –4 மணி; வெளிநாடுகளில் அதிகாலை 4 மணி IST க்கு வெளியாகவுள்ளது.

பான் இந்தியா படமாக வெளியாகும் லியோ, இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை முதல்நாள் முதற்காட்சியில் பார்க்க ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு மேல் லியோ வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சன்லைட் தியேட்டரில்  விஜய்யின் லியோ படம் நள்ளிரவு 12:05 மணிக்கே வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

எம்புரான் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன… சட்டசபையில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments