Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளிநாடுகளில் நடக்கவுள்ள கமல் –ஹெச் வினோத் பட ஷூட்டிங்!

வெளிநாடுகளில் நடக்கவுள்ள கமல் –ஹெச் வினோத் பட ஷூட்டிங்!
, புதன், 18 அக்டோபர் 2023 (09:38 IST)
நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தியன் 2 ஷூட்டிங்கை முடித்துள்ள கமல் அடுத்து கல்கி 2898 படத்தில் விலல்னாக நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் ஹெச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கிடையில் ஹெச் வினோத் இயக்கும் படத்துக்காக சில பயிற்சிகளை கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறார் என சொல்லப்பட்டது. அந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முக்கியமான சில காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஆக்‌ஷன் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் வடிவமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே விக்ரம் படத்தில் கமல்ஹாசனோடு இணைந்து பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் 51 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?