ராஜமௌலியின் அடுத்த படம் பற்றிய அப்டேட் கொடுத்த கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (16:53 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாப்ய் நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த படம் இண்டியானா ஜோன்ஸ் போல ஒரு சாகசப் படம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெரும்பாலான காட்சிகள் காடுகளில் படமாக்கப்பட உள்ளதாகவும், ஏராளமான விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் வெளிநாட்டில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.

இந்நிலையில் இப்போது இந்த படம் பற்றி பேசியுள்ள ராஜமௌலியின் தந்தையும், கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் ஒரு அப்டேட்டைக் கொடுத்துள்ளார். அதில் இந்த படம் இண்டியானா ஜோன்ஸ் பட வரிசையில் வெளிவந்த ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க் படத்தை போல இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் இந்த படம் பல பாகங்கள் கொண்ட ஒரு திரைப்படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இது ஆக்‌ஷன் சாகச பட பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது?!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments