Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்‌ஷனும் தேசபக்தியும்தான் ஆர் ஆர் ஆர் படம்- கதாசிரியர் தகவல்!

ஆக்‌ஷனும் தேசபக்தியும்தான் ஆர் ஆர் ஆர் படம்- கதாசிரியர் தகவல்!
, வெள்ளி, 23 ஜூலை 2021 (11:50 IST)
இயக்குனர் ராஜமௌலியின் தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் ஆர் ஆர் ஆர் படம் பற்றி பேசியுள்ளார்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய அனைத்து படங்களுக்கும் கதை எழுதியது அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்தான். பாகுபலி வெற்றிக்குப் பின்னர் அவர் இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் கதாசிரியராக ஆகியுள்ளார். இப்போது ஆர் ஆர் ஆர் படத்துக்கும் அவர்தான் கதை எழுதியுள்ளார்.

இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படம் பற்றி பேசியுள்ள அவர் ‘இந்த படம் இதுவரை ரசிகர்கள் திரையில் பார்க்காததாக இருக்கும். ஆக்‌ஷனும், தேசபக்தியும் கலந்து உணர்ச்சிகரமான படமாக இது இருக்கும். இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் சந்தித்துக் கொண்டால் என்ன நடந்திருக்கும் என்ற புனைவுதான்’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சார்பட்டா வெற்றியால் சூடுபிடிக்கும் அரண்மனை 3 வியாபாரம்!