விஜய் - அஜித் வில்லன்களுடன் மோதும் பிரபாஸ்

வியாழன், 21 டிசம்பர் 2017 (11:02 IST)
விஜய், அஜித் படங்களில் வில்லன்களாக நடித்தவர்களைத் தனக்கும் வில்லனாக நடிக்க வைத்துள்ளார் பிரபாஸ்.
‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு ‘சாஹு’ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகிவரும் இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், மந்திரா பேடி ஆகியோரும் நடிக்கின்றனர். சுஜீத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
 
இந்தப் படத்தில், விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்த நீல்நிதின் முகேஷ், பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கிறார்.  அதேபோல், அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் நடித்த விவேக் ஓபராயும் வில்லனாக நடிக்கிறார். இதன்மூலம் விஜய், அஜித்துடன் மோதிய வில்லன்களுடன் தானும் மோதுகிறார் பிரபாஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் த்ரிஷாவின் ‘மோகினி’ டிரைலரை வெளியிடும் கார்த்தி