Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வருடத்துக்குப் பின் விஜய் செய்யும் கதாபாத்திரம்… முருகதாஸ் படத்திலாவது வொர்க் அவுட் ஆகுமா?

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (15:57 IST)
நடிகர் விஜய் அடுத்து முருகதாஸ் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த படம் பொங்கலுக்குப் பின்னர்தான் ஆரம்பிக்கப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தைப் பற்றிய சில விஷயங்கள் கசிந்துள்ளன. அதன்படி விஜய்க்கு படத்தில் இரட்டை வேடமாம். அதில் ஒரு கதாபாத்திரம் முழுக்க முழுக்க நெகட்டிவ் தன்மை கொண்டதாம். இதற்கு முன்னதாக விஜய் அழகிய தமிழ்மகன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெறவில்லை. படமும் தோல்வி அடைந்தது. இதையடுத்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திலாவது அது வொர்க் அவுட் ஆகுமா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments