Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் டபுள் ஆக்‌ஷனில் விஜய் – தளபதி 65 ஷூட்டிங் தேதி அறிவிப்பு!

மீண்டும் டபுள் ஆக்‌ஷனில் விஜய் – தளபதி 65 ஷூட்டிங் தேதி அறிவிப்பு!
, வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:38 IST)
விஜய் நடிப்பில் அடுத்து உருவாகும் விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த படம் பொங்கலுக்குப் பின்னர்தான் ஆரம்பிக்கப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தைப் பற்றிய சில விஷயங்கள் கசிந்துள்ளன. அதன்படி விஜய்க்கு படத்தில் இரட்டை வேடமாம். அதில் ஒரு கதாபாத்திரம் முழுக்க முழுக்க நெகட்டிவ் தன்மை கொண்டதாம். மேலும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Source வலைப்பேச்சி இணைய சேனல்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா – வைரலாகும் புகைப்படங்கள்!