Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுதாவைப் பின்னுக்குத் தள்ளி முருகதாஸ் வந்தது எப்படி – உருவாகிறது விஜய்யின் துப்பாக்கி 2!

சுதாவைப் பின்னுக்குத் தள்ளி முருகதாஸ் வந்தது எப்படி – உருவாகிறது விஜய்யின் துப்பாக்கி 2!
, வெள்ளி, 20 மார்ச் 2020 (08:18 IST)
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்துக்குப் பின்னர் துப்பாக்கி 2 கதையில் அவர் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் 64 ஆவது படமான மாஸ்டர் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதையடுத்து அவரது அடுத்த படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி எழுந்த நிலையில் அதில் பலரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் சுதா கொங்கரா சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப் போகவே அதில் நடிப்பார் என சொல்லப்பட்டது.

ஆனால் திரைக்கதை பணிகளை முடித்து படப்பிடிப்பு தொடங்க இந்த அண்டு இறுதி ஆகிவிடும் என்பதால் அதற்குள் ஒரு படத்தை நடித்து முடிக்க ஆர்வமாக இருக்கிறார் விஜய். இந்நிலையில் தனக்கு துப்பாக்கி படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைத் தந்த முருகதாஸ் துப்பாக்கி 2 திரைக்கதையோடு வர அவருக்கு ஓகே சொல்லியுள்ளார். இதனால் 65 ஆவது படமாக துப்பாக்கி 2 ம் 66 ஆவது படமாக சுதா கொங்கரா இயக்கும் படமும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை - படம் பிளாப் ஆனது குறித்து இயக்குனர் கருத்து !