Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் நாள் முதல் காட்சி… வேட்டையன் படம் பார்த்த விஜய்!

முதல் நாள் முதல் காட்சி… வேட்டையன் படம் பார்த்த விஜய்!

vinoth

, வியாழன், 10 அக்டோபர் 2024 (14:49 IST)
ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையிக், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வேட்டையன் திரைப்படம் ரிலீஸாகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலையிலேயே சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் விஜய் வேட்டையன் படத்தைப் பார்த்துள்ளார்.

முகத்தில் மாஸ்க் அணிந்து அவர் திரையரங்குக்குள் செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இன்று காலை தனுஷ், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினி மற்றும் அனிருத் உள்ளிட்ட பிரபலங்களும் வேட்டையன் படத்தை மக்களோடு மக்களாக கண்டுகளித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சிகள் மாறினாலும் தொழில் நேர்மையை மாற்றாத மகத்தான மனிதர்: டாடா குறித்து வைரமுத்து..!