Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீண்ட நாட்களுக்குப் பிறகு பொது இடத்தில் மனைவியோடு விஜய்.. குடும்பத்தோடு கோட் பார்த்து ரசித்த சங்கீதா!

நீண்ட நாட்களுக்குப் பிறகு பொது இடத்தில் மனைவியோடு விஜய்.. குடும்பத்தோடு கோட் பார்த்து ரசித்த சங்கீதா!

vinoth

, வியாழன், 5 செப்டம்பர் 2024 (15:48 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

தற்போது படம் இரண்டு காட்சிகளைக் கடந்து ஓடிவரும் நிலையில் விஜய் ரசிகர்கள் ஆஹோ ஓஹோவென்று புகழ்வதும் பொதுவான ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை சொல்வதும்தான் தற்போதைய நிலவரமாக உள்ளது. இந்நிலையில் இன்று படம் ரிலீஸாகியுள்ள நிலையில் பல பிரபலங்கள் திரையரங்குகளில் படம் பாரத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு இன்று சென்னை அடையாறில் கோட் படத்தைப் பார்த்துள்ளார். விஜய், கடந்த சில ஆண்டுகளாக மனைவி சங்கீதாவோடு எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. அதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்றைய படம் பார்க்கும் வைபவம் நடந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருமான வரியில் கோலியை முந்தினாரா விஜய்?