Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோட்' வெளியான திரையரங்கில் தொழில்நுட்ப கோளாறு.. படம் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம்

கோட்' வெளியான திரையரங்கில் தொழில்நுட்ப கோளாறு..  படம் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம்

Mahendran

, வியாழன், 5 செப்டம்பர் 2024 (13:05 IST)
புதுக்கோட்டையில் விஜய் நடித்த 'தி கோட்' படம் வெளியான திரையரங்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 
தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்று வெளியாகிய நிலையில் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான படமாக இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் மற்ற நடுநிலை ரசிகர்களுக்கு சுமாரான படமாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கோட் பட கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் புதுக்கோட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் படம் திரையிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் படம் நிறுத்தப்பட்டது.
 
ஒரு மணிநேரம் மட்டுமே ஓடிய படம் ஆடியோ பிரச்சினையால் பாதியில் நிறுத்தப்பட்டதால்  ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அரை மணிநேரத்திற்கும் மேலாக படம் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் ரசிகர்கள் கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் ‘கோட்’ படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’ உள்ளது: விசிக எம்பி ட்விட்..!